குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் உருவாகலாம்.

22ம் தேதி முதல் 24ம் தேதி வரை வறண்ட வானிலை நீடிக்கும். 25 மற்றும் 26ம் தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்றிலிருந்து 24ம் தேதி வரை குறைந்தபட்ச வெப்பநிலை சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும்.

நீலகிரி மாவட்டத்தில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்படும் சாத்தியம் உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 21 டிகிரி செல்சியஸ் இருக்கும். தென்தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!