விஜய் டிவியில் 75 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 9.
வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேருடன் நிகழ்ச்சி தொடங்கியது நினைவிருக்கலாம்.
இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார்.
பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் வெளியேறினர். முதலில் எவிக்ஷன் மூலம் வெளியேறிய ஆதிரை சில தினங்களுக்கு முன் சர்ப்ரைஸ் எண்ட்ரியாக மீண்டும் நிகழ்ச்சிக்குள் சென்றார்.
கடந்த வார எவிக்ஷனில் ரம்யா மற்றும் வியானா ஆகியோர் வெளியேறினர்.
முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால் நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால் டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு என்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர்.
இவர்களிலும் பிரஜின் எவிக்ட் ஆகி வெளியேறி விட்டார்.
இந்நிலையில் இந்த வார எவிக்ஷனுக்கான ஷூட்டிங் நேற்று காலை தொடங்கி இரவு வரை பிக்பாஸ் செட்டில் நடந்தது.
அரோரா, ஆதிரை
காலை ஷூட்டிங் தொடங்கியதும் விஜய் சேதுபதியின் வழக்கமான விசாரிப்புகள் நடந்தன.
மாலை எவிக்ஷனுக்கான நேரம் வந்தது. சாண்ட்ரா, ஆதிரை எஃப்.ஜே உள்ளிட் சிலர் நாமினேஷன் பட்டியலில் இருந்த நிலையில் இந்த வாரம் மீண்டும் டபுள் எவிக்ஷன் நிகழ்ந்துள்ளது.
அதாவது கடந்த இரண்டு வாரம் கடைசி நிமிடத்தில் தப்பிய எஃப்.ஜே மற்றும் இரண்டாவது முறையாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற ஆதிரை இருவருமே வெளியேறியுள்ளனர்.
எஃப் ஜே
எஃப்.ஜே, ஆதிரை, வியானா ஆகியோருக்கிடையில் முக்கோணக் காதலா எனப் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது மூன்று பேருமே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார்கள்.
அப்படின்னா இனிமே கண்டெண்ட் என்கிறீர்களா, அதான் பார்வதி கம்ருதீன் இருக்கிறார்களே, என்கிறார்கள் பிக் பாஸ் ரசிகர்கள்.