படப்பிடிப்பை முடித்தது தனுஷின் D 54 படக்குழு… வைரலாகும் போஸ்ட்
TV9 Tamil News December 21, 2025 05:48 PM

நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டில் மட்டும் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் இந்த 2025-ம் ஆண்டில் மட்டும் இதுவரை குபேரா, இட்லி கடை மற்றும் தேரே இஸ்க் மெய்ன் என அடுத்தடுத்து மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியாகி  ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இறுதியாக கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. லவ் ஆக்‌ஷன் ட்ராமாவாக வெளியான இந்தப் படம் தமிழ் சினிமாவை விட இந்தியில் அதிக அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதன்படி இந்தப் படம் இதுவரை ரூபாய் 150 கோடிகளுக்கு அதிகமாக வசூலித்தது சாதனையை படைத்து வருகிறது. சமீபத்தில் படக்குழு வெற்றி விழாவைக் கொண்டாடியது.

தொடர்ந்து ரசிகர்களிடையே தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அடுத்தடுத்தப் படங்களில் நடிகர் தனுஷ் பிசியாக நடித்து வருகிறார். அதன்படி தற்போது தனுஷின் நடிப்பில் 54-வது படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷூட்டிங் தொடங்கியது. இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி உள்ளார். இதில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார்.

படப்பிடிப்பை முடித்தது தனுஷின் D 54 படக்குழு:

இந்த நிலையில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்ததாக இணையத்தில் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக இயக்குநர் ராஜ் குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள அவரது 55-வது படத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஒரு பேரே வரலாறு பாடல்

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

And that’s a wrap on #D54 🔥 for us!
Moments from the set with our Dear D and the entire team!✨@dhanushkraja

Directed by @vigneshraja89.
Produced by @IshariKGanesh
A @gvprakash musical 🥁@VelsFilmIntl @kushmithaganesh @ThinkStudiosInd @alfredprakash17 @thenieswar… pic.twitter.com/xgTQFmRnO6

— Vels Film International (@VelsFilmIntl)

Also Read… உலக புகழ்பெற்ற வைரல் டான்ஸை ஆடிய அஜித் மகன் ஆத்விக்… வைரலாகும் வீடியோ

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.