தவெகவில் இணைந்த பத்திரிக்கையாளர் பெலிக்ஸ்!.. சவுக்கு சங்கர்தான் காரணமா?..
WEBDUNIA TAMIL December 21, 2025 06:48 PM



2021-ல் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு போன்ற பத்திரிகையாளர்கள் youtube சேனலில் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசி வந்தனர். திமுக ஆட்சியில் இருக்கும் தவறுகல், அதை முதல் முதலில் கண்டு கொள்ளாமல் இருக்கிறார் என்கிற ரீதியில் இருவரும் பேசி வந்தனர். தனிப்பட்ட முறையில் சவுக்கு சங்கருக்கு ஃபெலிக்ஸ் நண்பராகவும் இருந்தார்.

சவுக்கு சங்கரை ஏற்கனவே திமுக அரசு சிலமுறை கைது செய்தது. ஆனாலும் அவர் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார். சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் திமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசினார் சவுக்கு சங்கர். அவரின் வீடியோக்களை பல லட்சம் பேர் பார்த்து வருகிறார்கள்.



இந்நிலையில்தான், சமீபத்தில் தமிழக அரசு சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தது. எப்படியும் அவர் மீது 20 வழக்குகள் பதிவு செய்யப்படும் என்பதால் 2026 தேர்தல் முடிந்தபின்னரே அவர் விடுதலை ஆவர் என்றும் பலரும் சொல்கிறார்கள்.

அதேபோல், பிலிப்ஸையும் சில மாதங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது. சமீபத்தில் அவர் விடுதலையாகி வெளியே வந்தார். மேலும், தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில்தான், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் பெலிக்ஸ் ஜெரால்ட். இது தொடர்பான புகைப்படங்களை விஜய் ரசிகர்களும் தவெகவினரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.



சவுக்கு சங்கரை தொடந்து தன்னையும் திமுக அரசு கைது செய்யலாம்.. ஒரு கட்சியின் ஆதரவு இருந்தால் சரியாக இருக்கும் என்று கருதியே பெலிக்ஸ் ஜெரால்ட் தவெகவில் இணைந்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.