பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அவர்களின் சொத்து மதிப்பு 700 பில்லியன் டாலர்களை கடந்துள்ள நிலையில், உலக வரலாற்றில் இந்த சாதனையை படைத்த முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். தற்போது எலான் மஸ்க்கின் மொத்த சொத்து மதிப்பு 749 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
உலகிலேயே நம்பர் ஒன் பணக்காரராக பல ஆண்டுகளாகத் தன்னுடைய இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் மஸ்க், தற்போது எட்டமுடியாத ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் கூகுள் நிறுவனத்தின் லாரி பேஜ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்க் படைத்துள்ள இந்த இமாலய சாதனையை அடுத்து, உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Edited by Siva