திமுகவில் சொகுசு அரசியல் கிடையாது; அரசியல் புரட்சியின் அடையாளமாக விளங்குகிறது; சொல்கிறார் முதல்வர்..!
Seithipunal Tamil December 23, 2025 11:48 AM

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்; நூற்றாண்டு காலத்திலும் திமுக ஆட்சியில் இருந்து தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் எனவும், திமுக என்றாலே அது போராட்டம், சிறை, தியாகம் தான் என்று பேசியுள்ளார்.

அத்துடன், திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது காரணம் தொண்டர்கள் தான் என்றும், அரசியலுக்கு பலரும் சொகுசு எதிர்பார்த்து வருவார்கள். ஆனால், திமுகவுக்கு அந்த சொகுசு கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சில கட்சிகள் சின்ன வழக்குக்கு கூட கட்சி விட்டு கட்சி தாவுவார்கள். கொடூரமான அடுக்குமுறைகள் , வன்முறைகளை தாண்டி கட்சிக்காக வாழ்ந்தவர்கள் திமுகவினர் என்று தெரிவித்துள்ளார்.

திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்கு எரிகிறதாகவும், அரசியல் புரட்சியின் அடையாளமாக திமுக விளங்குகிறதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நூறாண்டுகள் கழித்தும் நீதிக்கட்சியின் நீட்சியாக திராவிட மாடல் அரசு நீடிக்கிறதாகவும், பல மாநிலங்களை விட பலவற்றில் நாம் முன்னேறி உள்ளதோடு,மற்ற மாநிலங்களைவிட  20 ஆண்டுகள் முன்னோக்கி தமிழகம் பயணிக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் குறிப்பிடுகையில், காலங்கள் மாறுகின்றன. எதிரிகளும் மாறுகிறார்கள். திமுக கம்பீரமாக நிற்கிறது என்று தெரிவித்துள்ளார். அத்துடன், எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியுள்ள திமுக. கண்முன் தெரியும் திமுக அரசின் சாதனைகளை எதிரிகள் ஏற்க மறுக்கின்றனர் என்று கூறியுள்ளார். அத்துடன், திமுக அனைவருக்குமான ஆட்சியாக செயல்படுகிறதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.