நடிகர் வித்யுத் ஜம்வால் தனது முகத்தில் எரியும் மெழுகுவர்த்தியின் மெழுகை ஊற்றும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த காட்சியை பார்த்த சிலர் கவலை தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், அவரது தைரியத்தை பலர் பாராட்டி வருகின்றனர்.
View this post on InstagramA post shared by KIDDAAN | Vlueprints | (@kiddaan)
இந்தி சினிமாவின் ஆக்ஷன் நாயகனாக அறியப்படும் வித்யுத் ஜம்வால், தமிழில் துப்பாக்கி, அஞ்சான், சமீபத்தில் வெளியான ‘மதராஸி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். உடல் பயிற்சி, சாகச காட்சிகளில் தனித்துவம் காட்டுபவராக அவர் ரசிகர்களிடம் பிரபலமானவர்.

தற்போது ஹாலிவுட்டில் ‘ஸ்ட்ரீட் பைட்டர்’ படத்தில் நடித்து வரும் வித்யுத் ஜம்வால், மீண்டும் தனது வித்தியாசமான முயற்சியால் கவனம் பெற்றுள்ளார். இந்த வீடியோ உண்மையானதா, பயிற்சியின் ஒரு பகுதியாகா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. என்னவாயினும், வித்யுத் ஜம்வால் மீண்டும் ரசிகர்களை பேச வைத்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!