ஜன நாயகன் படத்தின் வட இந்திய திரையரங்கு உரிமைகளை பெற்றது ஜீ ஸ்டுடியோஸ்!
TV9 Tamil News December 24, 2025 03:48 AM

தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு காத்திருக்கும் படம் ஜன நாயகன். நடிகர் விஜய் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் அவரது நடிப்பில் உருவாகும் 69-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் நடிகர் விஜயின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகும் படம் என்பதால் இந்தப் படம் தொடர்பான அப்டேட்களுக்கு தொடர்ந்து ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். அந்த வகையில் படத்தின் டைட்டில் வெளியான போதே படம் நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு ஏற்றார் போல உள்ளது என்று ரசிகர்களும் சினிமா விமர்சகர்களும் கருத்து தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழு குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கி உள்ள நிலையில் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து முன்னதாக இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 27-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற உள்ளது. இது தளபதி கச்சேரி என்று விஜய்க்கு ஃபேர்வல் போல நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜன நாயகன் படத்தின் திரையரங்கு உரிமைகளை பெற்றது ஜீ ஸ்டுடியோஸ்:

இந்த நிலையில் படம் வருகின்ற 09-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் சேல்ஸ் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் ஜன நாயகன் படத்தின் வட இந்திய திரையரங்கு உரிமைகளை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து படக்குழு தங்களது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Also Read… ப்ரீ ரிலீஸ் பிசினசில் தெறிக்கவிடும் ஜன நாயகன்… முதல் நாள் மட்டுமே இத்தனை கோடி வசூலிக்குமா?

ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Aavoo together bhaiya bhaiya to witness his one last dance 🔥@ZeeStudios_ has bagged the North India theatrical rights ♥️#JanNeta#JanNetaFromJan9#Thalapathy @actorvijay @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01… pic.twitter.com/mJmz3LJ1tO

— KVN Productions (@KvnProductions)

Also Read… SVC59: விஜய் தேவரகொண்டா- கீர்த்தி சுரேஷின் புது பட கிளிம்ப்ஸ் வெளியானது.. டைட்டில் இதுதானா?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.