பெண்களின் ஆடை சுதந்திரம் குறித்து அநாகரிகமாகப் பேசிய தெலுங்கு நடிகர் சிவாஜிக்கு, பாடகி சின்மயி கடும் பதிலடி கொடுத்துள்ளார். “நடிகைகள் சேலை அணிந்து உடலை மறைக்க வேண்டும்” என சிவாஜி கூறியிருந்த நிலையில், சின்மயி தனது எக்ஸ் (X) தளத்தில் அவரை விளாசியுள்ளார்.
“நடிகைகளுக்குத் தேவையற்ற அறிவுரைகளை வழங்கும் சிவாஜி, பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்; அவர் தன்னை ‘இன்செல்’ (Incels) கூட்டத்திற்கு ஹீரோவாகக் காட்டிக்கொள்ள முயல்கிறார்” எனச் சின்மயி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
A post shared by Subtitles Speak | Cinema (@subs_speak)
சிவாஜியின் இரட்டை வேடத்தைச் சுட்டிக்காட்டிய சின்மயி, “நீங்களே ஜீன்ஸ் மற்றும் ஹூடி (Hoodie) அணிந்துகொண்டு பெண்களுக்கு மட்டும் கலாச்சாரம் பேசுகிறீர்கள்; இந்திய கலாச்சாரத்தைப் பின்பற்ற வேண்டும் என்றால், நீங்களும் வேட்டி மட்டுமே கட்ட வேண்டும், நெற்றியில் பொட்டு வைக்க வேண்டும்” எனச் சாடியுள்ளார்.
View this post on Instagram
A post shared by Chinmayi Sripada (@chinmayisripaada)
மேலும், அவர் திருமணமானவர் என்றால் இந்திய முறைப்படி கங்கணம் மற்றும் கால் மெட்டி அணிந்து தனது திருமண அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டியதுதானே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
திரைத்துறையில் பெண்கள் இன்றும் இவ்வளவு கேவலமாக நடத்தப்படுவது நம்பவே முடியாத ஒன்றாக இருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.