இந்தியாவில் மகளிர் பிரீமியர் லீக் போட்டி அடுத்த வருடம் ஜனவரி மாதம் 9-ம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதன் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதுகிறது.
இந்த நிலையில் தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியின் கேப்டனாக இருந்த மெக் லேனிங்கை உபி வாரியர்ஸ் அணி எழுத்தில் வாங்கியது. மேலும் இதன் காரணமாக கடந்த உலகக்கோப்பை போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ஜெமிமாவை தற்போது டெல்லி அணியின் கேப்டனாக நியமித்துள்ளனர்.