கேரளாவில் அவ்வப்போது பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது மீண்டும் அங்கு நோய் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டையம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த கோழி, வாத்து மற்றும் காடைகள் திடீரென உயிரிழந்தன. அவற்றின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில், H5, N1 (பறவைக் காய்ச்சல்) வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, கேரள சுகாதாரத்துறை நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. கேரளாவில் நோய் பரவி வருவதால், அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலும் கோழிப்பண்ணைகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எல்லையோர மாவட்டங்களில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் கேரள அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Edited by Siva