தங்கம் விலை, டிசம்பர் 25, 2025: 2025 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே தங்கத்தின் விலை ஏற்றத்தில் இருந்து வருகிறது. தினசரி தங்கம் விலை வரலாறு காணாத அளவில் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இந்தச் சூழலில், 25 டிசம்பர் 2025 தேதியான இன்று, ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 20 ரூபாய் அதிகரித்து ரூபாய் 12,820-க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 160 அதிகரித்து ரூ. 1,02,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு பக்கம் உயர்ந்தாலும், வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. அந்த வகையில், இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 1 அதிகரித்து ரூ. 245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
2026-ல் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு:வரக்கூடிய 2026 ஆம் ஆண்டிலும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படும் என நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளான ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தின் மீதான முதலீடுகளை அதிகரித்து வருவதன் காரணமாக, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில், 2026 ஆம் ஆண்டிலும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ₹1,20,000 வரை விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: அமேசான் முதல் ஃபிளிப்கார்ட் வரை… இ-காமர்ஸ் துறையில் அசூர வளர்ச்சி – காரணம் என்ன?
2025 டிசம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. டிசம்பர் 15 அன்று வரலாறு காணாத அளவில் உச்சத்தை அடைந்து, ஒரு லட்சம் ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சற்று சரிவு காணப்பட்டாலும், மீண்டும் டிசம்பர் 22 முதல் தங்கத்தின் விலை உயர்வை எட்டி வருகிறது.
வரலாறு காணாத அளவு புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை:டிசம்பர் 23 நிலவரப்படி, ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 1,02,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. டிசம்பர் 24 அன்று, ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,02,400-க்கும், டிசம்பர் 25 தேதியான இன்று, ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,02,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம்: ரூ. 13,098, ஒரு சவரன்: ரூ. 1,11,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: தங்க நகை கடனுக்கு செக் வைத்த ஆர்பிஐ.. வங்கிகள் எடுத்த முக்கிய முடிவு!
தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். தங்கம் விலை ஒரு பக்கம் உயர்ந்தாலும், வெள்ளியின் விலை தொடர்ந்து ஏற்றம் காணப்படுகிறது. டிசம்பர் மாதம் மட்டுமல்லாமல், இந்த ஆண்டு தொடக்கம் முதலே வெள்ளியின் விலையும் அதிகரித்து வருகிறது. 25 டிசம்பர் 2025 தேதியான இன்று நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ. 245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.