கிறிஸ்துமஸ் தினத்தில் ஏன் தேவாலயங்களில் 5 மெழுகுவர்த்திகள் ஏற்றுகிறார்கள்... காரணம் இது தான்?
Dinamaalai December 25, 2025 04:48 PM

உலகம் முழுவதும் நேற்று இரவு முதலே இயேசு கிறிஸ்து  பிறப்பையொட்டி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக கிறிஸ்துமஸ் பிரார்த்தனை மற்றும் கொண்டாட்டங்களில் தேவாலயங்களில் 5 மெழுகுவர்த்திகளை கிறிஸ்துவர்கள் வழிபடுகிறார்கள். இதற்கான காரணம் தெரியுமா?

மக்களின் மனதில் இருந்த இருளை அகற்ற உதித்த பேரொளி தான் கிறிஸ்துமஸ் பண்டிகையின் நோக்கம் பெத்லகேம் என்னும் சின்னஞ்சிறு ஊரில் மாட்டுத்தொழுவத்தில் எளிமையாக பிறந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் வாழ்ந்த காலத்தில் ஏழை, எளிய மக்களின் துயர் துடைக்க பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி காட்டினார். அவரின் பிறப்பைக் கொண்டாடுவதால் மக்களின் மனதில் உறுதியான நம்பிக்கை ஏற்படும்.கிறிஸ்துமஸ் விழா நமக்குச் சொல்லும் செய்தி, அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம், பகிர்வு ஆகியவையே.

கிறிஸ்துவின் பிறப்பு அன்பின் விழா என்பதை உணர்த்த முதல் வாரத்தில் கருநீல நிற மெழுகுவர்த்தியும், நம்பிக்கையின் விழா என்பதை உணர்த்த 2ம் வாரத்தில் மீண்டும் ஒரு கருநீல மெழுகுவர்த்தியும், மகிழ்ச்சியை கொண்டாட 3ம் வாரத்தில் இளஞ்சிகப்பு நிற மெழுகுவர்த்தியும், எதிர்நோக்கினை வெளிக்காட்ட 4 வது வாரத்தில் மீண்டும் கருநீல நிற மெழுகுவர்த்தி என கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்பு 4 வாரங்களில் இந்த நான்கு வகையான மெழுகுவார்த்திகள் தேவாலயங்களில் ஏற்றப்படுவது வழக்கம்.கிறிஸ்துவின் பிறந்த நாளில் 5 வதாக வெள்ளை நிற மெழுகுவர்த்தியும் ஏற்றப்படுகிறது. ஐந்து மெழுவர்த்திகள் ஏற்றி வழிபடுவதற்கான காரணம் இது தான். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.