நீலகிரி மாவட்டத்தில் கடும் உறை பனிப்பொழிவு (Frost) நிலவி வருவதால், மலைகளின் அரசியான ஊட்டி தற்போது 'குட்டி காஷ்மீர்' போலக் காட்சியளிக்கிறது. மைனஸ் டிகிரி வரை சென்ற குளிரைக் ரசிக்கத் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஊட்டியில் திரண்டுள்ளனர்.
ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான அவலாஞ்சி, அப்பர்பவானி, குன்னூர், கோத்தகிரி ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களாகக் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக, தலைகுந்தா பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக பசும் புல்வெளிகள் அனைத்தும் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல ஒரு அங்குல உயரத்திற்கு உறைபனியால் மூடப்பட்டுள்ளன. வீடுகளுக்கு வெளியே பாத்திரங்களில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர், அதிகாலையில் பனிக்கட்டிகளாக மாறியதைக் கண்டு உள்ளூர் மக்களே வியப்படைந்துள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் மற்றும் கூரைகள் மீது உறைபனி படர்ந்துள்ளது.
பொதுவாகக் குளிர்காலத்தில் ஊட்டியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு ஊட்டியின் உறைபனி குறித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

"காஷ்மீருக்குச் செல்ல வேண்டும் என்பது எங்கள் நீண்ட நாள் ஆசை. ஆனால், ஊட்டியிலேயே அந்த அனுபவம் கிடைக்கிறது. காலையில் புல்வெளிகளில் படர்ந்திருக்கும் பனியைத் தொட்டு விளையாடுவது மிகச்சிறந்த அனுபவமாக உள்ளது" எனச் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகளின் திடீர் வரவால் தலைகுந்தா மற்றும் ஊட்டி - மைசூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையோரம் வாகனங்களை நிறுத்திப் புகைப்படம் எடுத்ததால் ஏற்பட்ட நெரிசலைத் தவிர்க்கப் போலீசார் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!