சோலார் பவர் மூலம் மின்சாரம் பெறுவதில் தமிழ்நாடு புதிய சாதனை; 5.08 கோடி யூனிட் சூரிய சக்தி உற்பத்தி; மின்வாரிய அதிகாரிகள் தகவல்..!
Seithipunal Tamil December 27, 2025 02:48 PM

சோலார் பவர் என்றழைக்கப்படும் சூரிய சக்தியின் மூலம் 5.08 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்து தமிழ்நாடு புதிய உச்சத்தை எட்டி இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நிலக்கரி, காற்றாலை, சூரிய சக்தி, நீர்மின், எரிவாயு, பயோகாஸ் போன்றவற்றில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 

இதில் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் தொழில்நுட்பம். இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது. இதனால், சோலார் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் மத்திய மாநில அரசுகளால் வழங்கப்படுகின்றன.

அந்தவகையில், சூரிய சக்திஇம் மூலம், மின் உற்பத்தியில் தமிழகம் புதிய உச்சம் தொட்டுள்ளது. அதனபடி, கடந்த டிசம்பர் 23 -ஆம் தேதி தமிழக மின்வாரியத்தின் மின் கட்டமைப்புக்குள் 5.08 கோடி யூனிட் சூரிய சக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் உச்சபட்சமாக 7,276 மெகாவாட் என்ற அளவையும் எட்டியதாக கூறப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் 4.85 கோடி யூனிட் உற்பத்தியும், ஆகஸ்ட் மாதம் 49.3 கோடி யூனிட் உற்பத்தியும் முதன்மையாக இந்த நிலையில் தற்போது அந்த சாதனையையும்உடைத்துள்ளது.  இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கையில்; 

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் சூரிய மின் உற்பத்தி சற்று குறைந்திருந்தது. ஆனால், தற்போது வானம் தெளிவாகவும், வறண்ட வானிலை நிலவுவதாலும், சூரிய மின் உற்பத்தி மீண்டும் சூடுபிடித்துள்ளதாக கூறியுள்ளனர்.

அத்துடன்,  கடந்த 23-ஆம் தேதி மட்டும் தமிழகத்தின் மொத்த மின் தேவையில் 06 ஒரு பங்கு, அதாவது சுமார் 345.68 மில்லியன் யூனிட் மின்சாரத்தை சூரிய சக்தி பூர்த்தி செய்ததாகவும்,  அன்றைய தினம், நகரங்களிலும் மாவட்டங்களிலும் இதமான வானிலை நிலவியதால், மின் தேவை சுமார் 17,000 மெகாவாட் குறைவாகவே இருந்தது என்று தெரிவித்துள்ளனர்.

 


அதேபோன்று 24-ஆம் தேதி சூரிய மின் உற்பத்தி சற்று குறைந்து 47.4 மில்லியன் ஆக இருந்தது என்றும், மழை பெய்ய வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதால், இனிவரும் நாட்களில் சூரிய மின் உற்பத்தி இன்னும் அதிகமாகும் என்று கூறியுள்ளனர்.

மேலும், உற்பத்தி செய்யப்படும் அனைத்து பசுமை மின்சாரத்தையும் மின் கட்டமைப்புக்குள் கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது 10,159.61 மெகாவாட் சூரிய மின் உற்பத்தித் திறன் உள்ளது. இதன் மூலம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு அடுத்தபடியாக, சூரிய மின் திறனில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, தமிழகம் தனது சூரிய மின் உற்பத்தித் திறனில் கூடுதலாக 2,000 மெகாவாட் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.