மக்கள் ஷாக்..!! ஒரே நாளில் ரூ.9000 உயர்வு..!!
Top Tamil News December 27, 2025 02:48 PM

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் உயர்ந்து வந்த நிலையில், தற்போது வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த அக்டோபர் 17ஆம் தேதி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.97,600 ஆக உயர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 28ஆம் தேதி ரூ.88,600 ஆகவும், நவம்பர் 13ஆம் தேதி ரூ.95,920 ஆகவும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இடையில் சில நாட்கள் விலை சற்றே குறைந்தாலும், மீண்டும் உயர்வை நோக்கி நகர்ந்தது. டிசம்பர் 12ஆம் தேதி, தங்கம் விலை பவுனுக்கு ரூ.98,960 ஆக உயர்ந்து, மீண்டும் ஒரு புதிய சாதனையை பதிவு செய்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் அந்த விலையிலேயே நீடித்த நிலையில், டிசம்பர் 15ஆம் தேதி ஆபரணத் தங்கம் வரலாறு காணாத வகையில் பவுனுக்கு ரூ.1 லட்சத்தை கடந்து சென்றது.

அந்த வகையில், இன்று (டிச.26) தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.12,890க்கும், ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,03,120க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.254க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.9,000 உயர்ந்து ரூ.2,54,000க்கும் விற்பனையாகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.