ஜப்பான் நாட்டில் 67 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாக்கியத்தில், 02 பேர் உயிரிழந்துள்ளதோடு, 26 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் கன்மா மாகாணத்தில் கன், எட்சு நகரங்களுக்கு இடையே தேசிய நெடுஞ்சாலையில் மினஹமி பகுதியில் நேற்று இரவு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு நிலவி வரும் சூழ்நிலையில் நெடுஞ்சாலையில் 02 லாரிகள் ஒன்றன்மீது ஒன்று மோதின. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடும் பனிப்பொழிவு காரணமாக இரவு நேரத்தில் போதிய வெளிச்சமின்மையால் நெடுஞ்சாலையில் வந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி தொடர் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், மொத்தம் 67 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியுள்ளன. இந்த கோர விபத்தில் 02 பேர் உயிரிழந்துள்ளதோடு, 26 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். அத்துடன், இந்த விபத்து குறித்து போலீசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.