விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை காண ரசிகர்கள் பெருந்திரளாக குவிந்ததால், மலேசியாவின் முக்கிய சாலையான மலேசியா சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடைபெறுகிறது.

கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற புக்கீட் ஜலீல் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் நேற்று மலேசியா சென்றடைந்தனர்.
இந்த முறை வழக்கமான இசை வெளியீட்டு விழாவாக அல்லாமல், ‘தளபதி கச்சேரி’ என்ற பெயரில் முழுமையான இசை கான்செர்ட்டாக நடத்தப்படுவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
நிகழ்ச்சி நடைபெறும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது முதலே ரசிகர்கள் குவிந்து வருவதால், அங்கு திருவிழா போல் சூழல் நிலவுகிறது.இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் சுமார் 80,000 ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.