''ராகுல் சோர்வடைய வேண்டாம். 2029-இல் நாட்டின் பிரதமர் மோடி தான்'; அமித்ஷா ..!
Seithipunal Tamil December 29, 2025 06:48 AM

குஜராத் ஆமதாபாதில் 27 கிமீ நீளமுள்ள வடிகால் பாதை கட்டப்பட்டபட்டுள்ளது. இந்த வடிகாலை பாதையானது, பாதையில் பள்ளம் தோண்டாமல் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கலந்துகொண்டு வடிகால் பாதையை திறந்து வைத்தார். அப்போது அங்கு பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் அக்கட்சியின் எம்பி ராகுலை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

மேற்கு வங்கத்திலும், தமிழகத்திலும் கான்கிரஸை  தோற்கடிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். மோடியின் அரசாங்கம் மீண்டும் அமைக்கப்படும் என்றும், நாங்கள் ராமர் கோவிலை கட்டினால் நீங்கள் எதிர்க்கிறீர்கள்..? என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ராகுல் சோர்வு அடைய வேண்டாம். என்றும், வரும்,  2029-இல் நாட்டின் பிரதமராக மோடியே மீண்டும் வருவார் என்றும் கூறியதோடு,  மக்களின் உணர்வுகள், வளர்ச்சி அரசியலை புரிந்து கொள்ளாததால் காங்கிரஸ் தோல்வி அடைகிறது என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

நாங்கள் (மத்திய அரசு) கொண்டு வரும் எந்த திட்டத்தையும் எதிர்க்கிறீர்கள். பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினால் எதிர்க்கிறீர்கள். ஊருடுவல்காரர்களை விரட்டினால் எதிர்க்கிறீர்கள். 370-வது பிரிவை நீக்கினால் எதிர்க்கிறீர்கள், பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்தால் எதிர்க்கிறீர்கள்.மக்கள் விரும்புவதை நீங்கள் எதிர்க்கிறீர்கள். பின்னர் உங்களுக்கு எங்கிருந்து ஓட்டுகள் கிடைக்கும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், உங்கள் சொந்த கட்சியினரே யதார்த்தத்தை உங்களுக்கு நம்ப வைக்க முடியாதவர்களாக உள்ளனர். பின்னர் நாங்கள் எப்படி விளக்கி கூறமுடியும்..? என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆட்சி மற்றும் பிரச்சினைகளை புரிந்து கொள்ளாமல் அதற்கு பதிலாக எப்ஐஆர்களை புரிந்து கொள்வதில் மிகுந்த மும்முரமாக ராகுல் இருக்கிறார் என்றும், பாஜவின் வளர்ச்சி சார்ந்த அரசியலும், நிர்வாக திறனும் தொடர்ந்து மக்களிடம் எதிரொலிக்கின்றதாக உள்துறை அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.