அமெரிக்காவில் டெவின்' குளிர்காலப் பனிப்புயல்; 1,800 விமானங்கள் ரத்து; 6,883 விமானங்கள் தாமதம்..!
Seithipunal Tamil December 29, 2025 08:48 AM

அமெரிக்காவை, 'டெவின்' என்ற குளிர்காலப் புயல் கடுமையாக தாக்கியுள்ளது. இந்த புயல் காரணமாக 1,800க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதோடு, 6,883 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், கடந்த சில தினங்களுக்கு முன் 54 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்ததில், அம்மாகாணம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியது. குறித்த வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாகாணங்களை, 'டெவின்' என்ற குளிர்கால புயல் தாக்கியுள்ள நிலையில், இதனால் கனமழையும், கடும் பனிப்பொழிவும்நிலவி வருகிறது. இதையடுத்து நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.