நடிகர் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) கடைசி திரைப்படமாக தயாராகிவருவதுதான் ஜன நாயகன் (Jana nayagan). இந்த படத்தில் தளபதி விஜய் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா (Jana Nayagan Audio Launch) நேற்று 2025 டிசம்பர் 27ம் தேதியில் மலேசியாவில் (Malaysia) உள்ள தேசிய விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் கிட்டத்தட்ட 80,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டிருந்தனர். அந்த வகையில் அதை முடித்துவிட்டு, இன்று 2025ம் டிசம்பர் 28ம் தேதி மாலையில் மலேசியாவில் இருந்து ஜன நாயகன் படக்குழுவுடன் தளபதி விஜயும் புறப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று 2025 டிசம்பர் 28ம் தேதி இரவில் சென்னை விமான நிலையத்தில் (Chennai Airport) படக்குழு வந்தடைந்தனர்.
இதனை அடுத்ததாக தளபதி விஜய்யை காண சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் குவிந்தனர். இதனால் அங்கும் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக விஜய்யை சுற்றி பாதுகாப்புடன் அவரை காரில் ஏற்ற முயன்ற நிலையில், கூட்டநெரிசலின்(fans Crowd) காரணமாக அவர் தடுமாறி கீழே விழுந்துள்ளார். பின் பாதுகாப்பாக அவரை அருகிலிருந்த உதவியாளர்கள் காரில் ஏற்றியுள்ளனர். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ‘ஒரு சதவீதம் திருப்தி இல்லையென்றாலும்’.. தி ராஜா சாப் பட நிகழ்வில் சவால்விட்ட இயக்குநர்!
Rockstar @anirudhofficial back to Chennai with #ThalapathyVijay and #JanaNayagan team!
pic.twitter.com/qKUR461VJV
— Anirudh FP (@Anirudh_FP)
நேற்று நடைபெற்ற இசைவெளியீட்டு விழாவை முடித்துவிட்டு, விஜய், அனிருத், மமிதா பைஜூ, ஹெச். வினோத் மற்றும் தயாரிப்பாளர் என ஜன நாயகன் படகுழு சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். இந்நிலையில் இந்த தகவல் அறிந்த விஜய் ரசிகர்கள் விமான நிலையத்தில் பெரும் கூட்டமாக கூடியிருந்தனர். இதனால் அங்கு நெரிசல் ஏற்பட்ட நிலையில், இந்த எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படிங்க:ஜன நாயகன் திரைப்படத்தின் கன்னட டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஓபன்.. தமிழில் டிக்கெட் புக்கிங் ஓபன் எப்போது தெரியுமா?
இந்த நெரிசலில் கீழே விழுந்த விஜய் எந்தவித காயங்களும் இன்றி காரில் ஏறி தனது இல்லத்திற்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதன் காரணமாகத்தான் விஜய் பொது இடங்களுக்கு அதிகம் செல்வதற்கு தயங்குகிறார் என ரசிகர்களும் இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.