தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே அறிவித்தபடி வரும் ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கவுள்ளதாக உறுதிபடத் தெரிவித்துள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்தத் தீவிர போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 6 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு உரிய தீர்வு காணும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Edited by Siva