வடிவேலுவுக்கு, நயன்தாராவுக்கும் விஜயை விட கூட்டம் வரும். விஜய் நாவை அடக்கி பேச வேண்டும் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் புதிதாக அமையவுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பூமிபூஜை மேற்கொண்டார். தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “பல்வேறு திட்டங்களை திமுக அரசு அறிவித்தாலும் எந்த திட்டமும் நிறைவேறவில்லை. சட்டமன்ற உறுப்பினராக நாங்கள் கொடுத்த கோரிக்கை எதுவும் தொகுதியில் நடக்கவில்லை. அதிமுக களத்தில் இல்லாத கட்சி என தவெக தலைவர் விஜய் கூறுகிறார். நாங்கள் களத்தில் இருக்கிறமோ இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். நேற்று வந்த விஜய்க்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. விஜய் நடிகர் என்பதால் கூட்டம் வருகிறது.மற்ற நடிகரை விட கொஞ்சம் கூட்டம் கூடுகிறது. இவரை விட வடிவேலு நயன்தாராவுக்கு கூட்டம் கூடும். விஜயை விட வடிவேலுவுக்கு என்னா கூட்டம் வரும். நடிகருக்கு கூட்டம் கூடத்தான் செய்யும்..
விஜய்க்கு கூடுதலாக ரசிகர்கள் இருக்கிறார்கள். மலேசியாவில் கூட நான் நடிக்கணுமா வேண்டாமா என கேட்டபோது மக்கள் யாரும் எதுவும் சொல்லவில்லை. ரசிகர்கள் தான் நடியுங்கள் என சொன்னார்கள். உடனே விஜய் அதைச் சொல்லிவிட்டால் சஸ்பென்ஸ் இருக்காது எனக்கூறி சஸ்பென்சாக முடித்துவிட்டார். எம்ஜிஆர் ரத்தத்தை வியர்வையாக்கி உழைத்து உழைத்து கிடைத்த பணத்தில் மக்களுக்கு நல்லது செய்து திமுக ஆட்சியில் இல்லாத போது அந்த கட்சியில் சேர்ந்து உழைத்த பின்பு தான் ஆட்சிக்கு திமுக வந்தது. படிப்படியாக எம்ஜிஆர் வளர்ந்தார். அண்ணா ஆட்சியைப் பிடித்த போது எம்ஜிஆர் பற்றி எனக்கு சூடும் வெற்றி மாலை ராமச்சந்திரனுக்கு உரியது என பேசினார். அப்படி படுத்துக்கொண்டே ஜெயிக்க வைத்தவர். தன்னுடைய படத்தில் போட்டோவை காட்டி வெற்றி பெற வைத்தவர். அதுபோல விஜய் ஆதரவு கொடுத்துள்ளாரா? தோற்ற கட்சிக்கு ஆதரவு கொடுத்தவர். இவர் யாருக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார். இவர் ஆதரவால் வெற்றி பெற்றவர்கள் உள்ளார்களா? நான் விஜய் பற்றி அதிகமாக பேசினால் அதிகமான விமர்சனம் ஆகிவிடும்.
கூட்டணி பற்றி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக கூறியுள்ளார்.கூட்டணி என்பது தேர்தல் பார்ட்னர். வாக்குகள் சிதற கூடாது என்பதற்காக கூட்டணி. கொள்கை கூட்டணி இல்லை. யாருமே கொள்கை கூட்டணி கிடையாது. திமுக பாஜகவோடு வைத்தது கொள்கை கூட்டணி இல்லை. அண்ணா காலத்தில் இருந்தே கூட்டணி இப்படித்தான் உள்ளது. திமுகவுக்கும் சிபிஎம்க்கும் என்ன கொள்கை உள்ளது. எல்லாமே அப்படித்தான்.நாங்கள் களத்தில் இல்லை என சொல்வது முட்டாள் தனம். இந்தியன் 2 போல ட்ரெய்லர் நல்லாத்தான் இருக்கும். ஒரு ஒரே எம்ஜிஆர் தான். எல்லோரும் எம்ஜிஆர் என்றால் அது வராது. எந்த தேர்தலில் விஜய் நின்று வென்றுள்ளார். கட்சி தொடங்கும் போது அவரை வரவேற்றவன் நான்.
எம்ஜிஆர் எடுத்த உடனேயே ஆட்சிக்கு வந்தாரா? அவர் போல விஜய் ஆக முடியாது. விஜய் எத்தனை தேர்தலில் யாருக்கு ஆதரவு கொடுத்துள்ளார். இவருக்கு என்ன பின்புலம் உள்ளது.
டிஆர், பாக்யராஜ், கமலஹாசன் எல்லோரும் அரசியலுக்கு வந்தார்கள். அவர்கள் போல விஜய் ஆகிவிடக்கூடாது. எங்கள் கட்சி களத்தில் இல்லை என சொல்ல அவனுக்கு எவ்வளவு தைரியம்.
நாவை அடக்கி பேச வேண்டும்” என எச்சரிக்கை விடுத்தார்.