விஜய் ஒரு பலி ஆடு!.. பின்னால் இருப்பது அந்த கட்சி!.. ஜேம்ஸ் வசந்தன் காட்டம்!...
Webdunia Tamil December 30, 2025 06:48 AM


நடிகர் விஜய் தமிழக அரசியல் வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே அவரின் குறிக்கோளாக இருக்கிறது.

அதே நேரம் திமுகவை தோற்கடிக்க வேண்டும் எனில் விஜய் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய வேண்டும்.. அப்படி செய்தால் மட்டுமே திமுகவை தோற்கடிக்க முடியும்.. அதை செய்யவில்லை என்றால் ஓட்டுகளை விஜய் பிரித்து அதை திமுகவுக்கு சாதகமாகவே அமையும்.. திமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று அரசியல் விமர்சிகர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். அதாவது, திமுக எதிர்ப்பு ஓட்டுகள் தவெகவுக்கு போனால் அந்த ஓட்டுகள் அதிமுகவுக்கு கிடைக்காமல் போகும் என்பதே கணிப்பு.

ஆனால் விஜயோ இதுவரை அதிமுக-பாஜக கூட்டணியில் இணையவில்லை. அதோடு திமுகவை மட்டுமே கடுமையாக விமர்சித்து வருகிறார். எந்த மேடையிலும் அவர் அதிமுகவை பற்றியும், பாஜகவை பற்றியும் பேசுவதும் இல்லை.. விமர்சிப்பதும் இல்லை. ஈரோடு பொதுக்கூட்டத்தில் இதற்கு விளக்கமளிளித்த விஜய் '‘நாங்கள் களத்தில் இருப்பவர்களை மட்டுமே எதிர்ப்போம்’ என்று பதில் சொல்லியிருக்கிறார். ஆனால் அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவை களத்தில்தான் இருக்கின்றன. விஜய் களத்தில் என்று எதை சொல்கிறார் என்பது தெரியவில்லை.
இந்நிலையில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஊடகம் ஒன்றில் பேசியபோது விஜயின் அரசியலை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்-ஆல் அழைத்துவரப்பட்ட, வழிநடத்தப்படுகிற விஜய் இந்த மண்ணுக்கு ஆபத்து என்பதால்தான் அவரை நான் எதிர்க்கிறேன். ஆர்எஸ்எஸின் அனுபவம், சூழ்ச்சி, பயங்கரவாத சிந்தனை முன்பு அரசியல் பின்னணியே இல்லாத விஜய் பலியாகி விடுவார்’ என்று காட்டமாக பேசியிருக்கிறார்.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.