தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி சிறப்புக் கதாப்பாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகர் முனிஷ் காந்த். இவரது நடிப்பில் முன்னதாக வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் முனிஷ்காந்த் தற்போது கதையின் நாயகனாக நடித்துள்ள படம் மிடில் கிளாஸ். இந்தப் படம் மிடில் கிளாஸ் குடும்த்தின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருந்தது. இந்தப் படத்தை இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படம் கடந்த 21-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் முனிஷ் காந்த் உடன் இணைந்து நடிகர்கள் விஜயலட்சுமி, குறைஷி, காளி வெங்கட், ராதா ரவி, கோடாங்கி வடிவேலு, மாளவிகா அவினாஷ், வேல ராமமூர்த்தி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் பிரணவ் முனிராஜ் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மிடில் கிளாஸ் படத்தின் விமர்சனம் இதோ:மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் கணவன் மனைவியாக இருக்கிறார்கள் முனிஷ் காந்த் மற்றும் விஜயலட்சுமி இருவருக்கும் மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். சொந்த ஊரில் இடம் வாங்கி வீடு கட்டவேண்டும் என்று முனிஷ்காந்த் நினைத்துக்கொண்டிருக்கும் போது விஜயலட்சுமி சென்னையிலேயே வீடு கட்டவேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
Also Read… ஓடிடியில் வெளியாகியுள்ள மம்முட்டியின் டோமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
இப்படி இருக்கும் சூழலில் முனிஷ்காந்தின் தந்தை வேல ராமமூர்த்தி வட இந்தியர் ஒருவருக்கு உதவி செய்கிறார். அவரை முனிஷ்காந்த் சந்தித்த போது அவர் ஒரு கோடி ரூபாய்க்கு காசோலை வழங்குகிறார். அதனை முனிஷ்காந்த் எதிர்பாராதவிதமாக தொலைத்துவிடுகிறார். இதனைத் தொடர்ந்து அந்த காசோலையைக் கண்டுபிடித்தாரா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… பிக்பாஸில் ஓபன் நாமினேஷன் என்ற பெயரில் திவ்யா மீது இருந்த வன்மத்தை கொட்டிய விக்ரம் – வைரலாகும் வீடியோ