இறந்த பிறகும் மதம் .... இறுதிச் சடங்கிற்காக 3 நாட்களாக காத்துக் கிடந்த சடலம்!
Dinamaalai December 30, 2025 11:48 PM

இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செய்வது மனிதநேயத்தின் அடிப்படை. ஆனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான புனியா பாய் என்ற மூதாட்டி, கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார் என்ற காரணத்தால், அவர் உயிரிழந்த பிறகும் அவரது உடலை அடக்கம் செய்ய ஊர்மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால், மூதாட்டியின் உடல் சுமார் மூன்று நாட்களாக அடக்கம் செய்யப்படாமல் வைக்கப்பட்டது. செய்வதறியாமல் தவித்த குடும்பத்தினர், ஊர்க்காரர்களின் பிடிவாதத்திற்கு முன் வேறு வழியின்றி மீண்டும் இந்து மதத்திற்கே மாறுவதாக ஒப்புக்கொண்டனர். அதற்கான சடங்குகள் நடத்தப்பட்ட பிறகே, உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இறந்த பிறகும் ஒருவருக்கு இவ்வளவு அவமானமும் அவலமும் ஏற்பட வேண்டுமா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. மதத்தின் பெயரில் மனிதநேயத்தை மறக்கும் போக்கு ஆபத்தானது என்றும், இந்த சம்பவம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் ஒன்றாக இருப்பதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.