பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் விசாரணையில் உள்ளது.இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் சூழலிலேயே, சமீபத்தில் ஜாய் கிரிசில்டா ஆண் குழந்தையை பெற்றெடுத்தது விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.

அந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜுடையதுதான் என அவர் வெளிப்படையாக தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த மாதம்பட்டி ரங்கராஜ், உண்மை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயாராக இருப்பதாக கூறி வந்தார்.
இந்த நிலையில், ஜாய் கிரிசில்டா வெளியிட்ட சமீபத்திய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அதில்,“டி.என்.ஏ. டெஸ்டுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் வந்தாரா என்று பலரும் மெசேஜ் அனுப்புகிறார்கள்.
அவர் எப்படி வருவார்? அறிக்கை தான் விடுவார். ஓடி ஒளிய தான் முடியும். ஆனால் கோர்ட்டு ஆர்டர் வந்தால் எத்தனை நாளுக்கு ஒளிவார்? நேரம் வரும்…”எனக் கடுமையான வார்த்தைகளில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவால், ஏற்கனவே சூடுபிடித்துள்ள இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்துள்ளதுடன், சமூக வலைதளங்களில் விவாதங்களும் விமர்சனங்களும் வெடித்துள்ளன.