இரண்டு நாள் தூக்கம் இல்லை… மனம் முழுக்க பாரம்...! அந்த படத்தின் தாக்கம் குறித்து மாரி செல்வராஜ் உருக்கம்
Seithipunal Tamil December 31, 2025 10:48 PM

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை போன்ற சமூகப் பின்னணியிலான வெற்றிப் படங்களை தொடர்ந்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்த இந்த படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் பாதையில் பயணித்தது.இதனைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார் மாரி செல்வராஜ்.

இந்த நிலையில், சமீபத்திய ஒரு நேர்காணலில் அவர் பகிர்ந்த அனுபவம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.அந்த பேட்டியில், ஜான்வி கபூர் நடித்த ‘ஹோம்பவுண்ட்’ திரைப்படம் தன்னை மனதளவில் உலுக்கியதாக அவர் தெரிவித்தார்.

“அந்த படம் என்னை உள்ளுக்குள் உடைத்துவிட்டது. இரண்டு, மூன்று நாட்கள் தூக்கம் வரவில்லை. ஒரு நாள் முழுவதும் யாரிடமும் பேசாமல் இருந்தேன். மனசு முழுக்க பாரமாக இருந்தது.

அந்த மாதிரி ஒரு தாக்கத்தை அந்த படம் ஏற்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை” என மனம் திறந்து பேசினார் மாரி செல்வராஜ்.

ஒரு திரைப்படம் ஒரு இயக்குநரையே இப்படியொரு மனநிலைக்கு தள்ளும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதே, ‘ஹோம்பவுண்ட்’ படத்தின் ஆழத்தையும், அதன் உணர்ச்சி வலிமையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.