தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, இந்த முறை 40 தொகுதிகள் என்ற கோரிக்கையை வலுவாக முன்வைத்துள்ளது.
கடந்த 2021 தேர்தலில் 25 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட காங்கிரஸ், தற்போது தனது எண்ணிக்கையை உயர்த்தி கோருவது அறிவாலய வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என்று பேசி வருவது திமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், ராகுல் காந்தி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் இடையேயான சுமூகமான உறவு இந்த விரிசலை சரி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் 40 இடங்களை பெறுமா அல்லது திமுக தனது பிடியை இறுக்கி இடங்களை குறைக்குமா என்பது வரும் மாதங்களில் தெரியவரும். கூட்டணி தர்மத்திற்காக திமுக இறங்கி வருமா அல்லது அதிரடி முடிவுகளை எடுக்குமா என்பதை பொறுத்தே 2026 தேர்தல் களம் அமையும்.
Edited by Siva