தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு… தச்சங்குறிச்சியில் ஜன.3 தொடக்கம்!
Dinamaalai January 01, 2026 12:48 AM

2026 ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறும். இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. கந்தர்வகோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சங்குறிச்சியில் ஆண்டுதோறும் முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.

ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் போதே காப்பீட்டு ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தொடர்பு இல்லாத இடங்களில் போட்டி நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு தளங்கள் இருந்தாலும், தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில்தான் தொடங்குகிறது. மேலும் தமிழகத்திலேயே அதிக வாடிவாசல்கள் கொண்ட மாவட்டமாக புதுக்கோட்டை விளங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.