தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திமுக தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் தனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள வாழ்த்து மடலில், பிறக்கும் இந்த புத்தாண்டு தொடக்கம் முதலே எங்கும் சமத்துவம் பொங்கட்டும், "தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற முழக்கத்தோடு திராவிட பொங்கல் களைகட்டட்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
திமுக உடன்பிறப்புகள் முன்னெடுக்கும் விளையாட்டுப் போட்டிகள், கலை மற்றும் இலக்கிய நிகழ்வுகள் என அனைத்தும் "திராவிடம் 2.0" என்ற புதிய பரிணாமத்திற்கான தொடக்கமாக அமைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த பொங்கல் திருநாளை வெறும் பண்டிகையாக மட்டும் பார்க்காமல், சமூக நீதிக்கான ஒரு மாபெரும் கொண்டாட்டமாக மாற்ற வேண்டும் என்பதே அவரது விருப்பமாகும். திராவிட பொங்கல் விழாவை முன்னெடுத்து, தமிழ்ப் பண்பாட்டையும் சமூக நீதி விழுமியங்களையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தொண்டர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் தனித்துவத்தை பறைசாற்றும் வகையில், திராவிட மாடல் கொள்கைகளுடன் இப்புத்தாண்டை கொண்டாடுவோம் என முதல்வர் தனது மடலில் குறிப்பிட்டுள்ளார்.
Edited by Siva