சமீபத்தில் நடைபெற்ற 2025 குளோப் சாக்கர் விருதுகள் வழங்கும் விழாவில், கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நகைச்சுவையான செயலால் அனைவரையும் சிரிக்க வைத்தார். மேடையில் உரையாற்றுவதற்காக அவர் வந்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த மைக்குகள் மிகத் தாழ்வாக இருந்தன. உடனே அவற்றைச் சரி செய்த ரொனால்டோ, அங்கிருந்தவர்களைப் பார்த்துப் புன்னகையுடன், “இது குள்ளமானவர்களுக்கானது போலிருக்கிறது” என்று கிண்டலாகக் கூறினார்.
மேலும் அவரது இந்தச் சமயோசித பேச்சும் குறும்பான செய்கையும் அரங்கத்தில் இருந்தவர்களைப் பெரும் சிரிப்பில் ஆழ்த்தியது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. களத்தில் ஆக்ரோஷமான வீரராகக் காணப்படும் ரொனால்டோவின் இந்த மென்மையான மற்றும் வேடிக்கையான பக்கம் அவரது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
“>
இந்நிலையில் எப்போதும் தன்னை மிகச் சிறந்த உடற்தகுதியுடன் வைத்திருக்கும் 6 அடி 2 அங்குல உயரமுள்ள ரொனால்டோ, மைக்கைச் சரி செய்தபடி நகைச்சுவை செய்த அந்தத் தருணம், குளோப் சாக்கர் விருது விழாவின் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்றாக மாறிவிட்டது.