2026-ஆம் ஆண்டு பிறக்கும் வேளையில், ஜனவரி 1 முதல் நிதி, வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இந்த விதிமுறைகளை சரியாகப் புரிந்துகொள்ளாவிட்டால், அது உங்கள் நிதி நிலையை பாதிக்கக்கூடும்.
குறிப்பாக, சிபில் ஸ்கோர் அப்டேட் செய்யும் முறையில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு வந்த கிரெடிட் ஸ்கோர், இனி ஒவ்வொரு வாரமும் அப்டேட் செய்யப்படும்.
அதேபோல், பான் மற்றும் ஆதார் அட்டைகளை இணைப்பதற்கான அவகாசம் முடிவுக்கு வருகிறது. இதனை செய்ய தவறியவர்களின் பான் கார்டுகள் செல்லாததாகிவிடும்.
டிஜிட்டல் பாதுகாப்பு கருதி, வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகள், அந்த சிம் கார்டு உள்ள மொபைலில் மட்டுமே இயங்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.
அதேபோல் வருமான வரி தாக்கல் செய்யும் படிவங்களிலும் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன, இது வரி செலுத்துவோருக்கு பிழைகளைக் குறைக்க உதவும்.
Edited by Mahendran