தொழிலதிபரிடம் லட்சக்கணக்கில் மோசடி... பிரபல சின்னத்திரை நடிகை 'அலைகள்” ராணி தலைமறைவு!
Dinamaalai January 01, 2026 03:48 PM

'அலைகள்', 'வள்ளி', 'ரோஜா' போன்ற புகழ்பெற்ற டிவி தொடர்களில் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை ராணி. இவரும் இவரது கணவர் பாலாஜியும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் தினேஷ் ராஜிடம் மோசடி செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.

தினேஷ் ராஜ் தனது ஹோட்டலை குத்தகைக்கு விடத் திட்டமிட்டபோது, ராணியின் கணவர் பாலாஜி அதை ரூ.10 லட்சத்திற்கு எடுப்பதாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது  தினேஷ் ராஜின் ரூ.80 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை "என் மனைவிக்கு மிகவும் பிடித்துள்ளது, சில நாட்கள் மட்டும் பயன்படுத்திவிட்டு தருகிறேன்" எனக் கூறி வாங்கிச் சென்றுள்ளார். அந்த காரில் தினேஷ் ராஜுக்குச் சொந்தமான ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வைரத் தோடும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பல நாட்கள் கடந்தும் கார் மற்றும் நகையைத் திருப்பித் தராததால், தினேஷ் ராஜ் நேரில் சென்று கேட்டுள்ளார். அப்போது பாலாஜியும் அவரது நண்பர் புருஷோத்தமனும் கத்தியைக் காட்டித் தினேஷ் ராஜைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

இது குறித்து தினேஷ் ராஜ் கரூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பாலாஜியின் நண்பர் புருஷோத்தமனைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை ராணி மற்றும் பாலாஜியை விசாரணைக்கு அழைக்க போலீசார் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவர்களது வீட்டிற்குச் சென்றபோது, வீடு பூட்டப்பட்டிருந்தது. அவர்களின் செல்போன்களும் அணைக்கப்பட்டுள்ளன.

நடிகை ராணி மற்றும் பாலாஜி தலைமறைவாகி விட்டதால், அவர்கள் கரூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, சென்னை வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டிச் சென்றுள்ளனர்.

சின்னத்திரையில் பல தொடர்களில் போலீஸ் அதிகாரியாகவும், வில்லியாகவும் மிரட்டிய நடிகை, நிஜ வாழ்க்கையில் மோசடி வழக்கில் சிக்கித் தலைமறைவாகி இருப்பது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.