துபாயில் 2026-ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் விண்ணைப் பிளக்கும் வாணவேடிக்கைகள் மற்றும் கண்கவர் ஒளி காட்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கின. உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் அரங்கேறிய இந்த பிரம்மாண்டமான கொண்டாட்டம், காண்போரை வேறொரு மாய உலகிற்கு அழைத்துச் செல்வது போல் அமைந்திருந்தது.
மேலும் நவீன தொழில்நுட்பம் மற்றும் வண்ணமயமான விளக்குகளின் சங்கமத்தில் மின்னிய புர்ஜ் கலிஃபாவின் இந்த அற்புதமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, உலகெங்கிலும் உள்ள பல மில்லியன் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
View this post on Instagram

“>
இந்த விழாவின் சிறப்பம்சமாக, கட்டிடத்தின் மேலிருந்து கீழாக ட்ரோன் கேமராக்கள் மூலம் படமாக்கப்பட்ட காட்சிகள் ஒரு கனவு உலகிற்குள் நுழைந்த உணர்வைத் தருகின்றன. ‘எர்த் பிக்ஸ்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர்.
இது துபாய் நகரம் ஒவ்வொரு ஆண்டும் தனது புதுமையான யோசனைகளால் உலகத்தையே வியக்க வைப்பதாகவும், இதுவே உலகின் மிகச்சிறந்த புத்தாண்டு கொண்டாட்டம் என்றும் இணையவாசிகள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.