youtube-ஐ மிஞ்ச வருகிறது எக்ஸ்… “இனி படைப்பாளர்களுக்கு அதிக வருமானம் என்பது உறுதி”… எலான் மஸ்கின் அசத்தல் அறிவிப்பு… பயனர்கள் செம குஷி..!
SeithiSolai Tamil January 02, 2026 03:48 AM

சமூக வலைதளங்களில் உள்ளடக்கங்களை உருவாக்கும் ‘கண்டென்ட் கிரியேட்டர்களுக்கு’ (Content Creators) வருமானம் வழங்குவதில், கூகுளின் யூடியூப் (YouTube) தளத்தை விட ‘எக்ஸ்’ தளம் எதிர்காலத்தில் முன்னிலை பெறும் என்று அதன் உரிமையாளர் எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தரமான உள்ளடக்கங்களுக்கு முக்கியத்துவம் ‘எக்ஸ்’ தளத்தில் அசல் மற்றும் தரமான பதிவுகளை ஊக்குவிக்கும் வகையில், பணமாக்குதல் (Monetization) திட்டங்களை மேலும் வலுப்படுத்த உள்ளதாக மஸ்க் கூறியுள்ளார்.

“பயனர்களுக்கு உரிய வருமானத்தை வழங்காத எந்தவொரு தளமும் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்க முடியாது” என்ற கருத்தை வழிமொழிந்துள்ள அவர், படைப்பாளர்களின் நலனில் அதிக அக்கறை காட்டப்போவதாகத் தெரிவித்துள்ளார். மோசடி கணக்குகள் மீது கடும் நடவடிக்கை பணமாக்குதல் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர, சில கடுமையான நிபந்தனைகளை எலான் மஸ்க் விதித்துள்ளார்.

தவறான முறையில் செயல்படும் கணக்குகள் மற்றும் துஷ்பிரயோகங்களை முற்றிலும் அகற்றிய பிறகே, புதிய வருமானத் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும். செயற்கை முறையில் லைக் மற்றும் பார்வைகளை அதிகரிக்கும் கணக்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தளத்தில் உள்ள 99 சதவீத மோசடி கணக்குகளை அகற்றுவதே தங்களின் முக்கிய இலக்கு என்று அந்நிறுவனத்தின் நிகிதா பேயர் தெரிவித்துள்ளார். யூடியூப்பிற்கு நேரடி சவால் கடந்த 2025 அக்டோபரில், ‘எக்ஸ்’ தளம் படைப்பாளர்களுக்கு மிகக் குறைந்த வருமானமே வழங்குவதாக எலான் மஸ்க் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருந்தார்.

வருமானப் பகிர்வில் சில தாமதங்கள் இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். தற்போது அந்தத் தடைகள் நீக்கப்பட்டு வருவதால், இந்தத் துறையில் முன்னணியில் உள்ள யூடியூப் தளத்திற்கு ‘எக்ஸ்’ தளம் மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக வருமானம் வழங்கப்பட்டாலும், அது முழுமையான கட்டுப்பாடுகள் மற்றும் தணிக்கைக்கு உட்பட்டே வழங்கப்படும் என்று எலான் மஸ்க் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.