ஜனவரி 16-ல் சென்னை பரங்கி மலையில் பிக்பாஸ் புகழ் ஜூலிக்கு டும்..டும்..டும்..?
Top Tamil News January 02, 2026 08:48 PM

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்று, சமூக வலைதளங்களில் ட்ரெண்டானவர் ஜூலி. செவிலியராகப் பணியாற்றி வந்த இவருக்கு, அந்தப் புகழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மிகப்பெரிய வாய்ப்பைப் பெற்றுத்தந்தது. அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சித் தொகுப்பாளர், குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் அம்மன் வேடம் எனப் பல்வேறு தளங்களில் தடம் பதித்தார். தற்போது மாடலிங் துறையில் தீவிரம் காட்டி வரும் ஜூலி, கதாநாயகிகளுக்கு இணையான பிரபலத்துடன் சமூக வலைதளங்களில் வலம் வருகிறார்.

சமீபகாலமாக மாடலிங்கில் பிஸியாக இருந்த ஜூலிக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்னர் முகமது ஐக்ரீம் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்த இந்த விழாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. ஜூலியின் வருங்கால கணவரான முகமது ஐக்ரீம், அவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளராகப் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஜூலியின் திருமண விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, வரும் ஜனவரி 16-ஆம் தேதி சென்னை பரங்கிமலையில் உள்ள செயின்ட் பேட்ரிக் தேவாலயத்தில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதே நாள் இரவு 7 மணியளவில் உறவினர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.