தமிழக காங்கிரஸ் கட்சி திமுகவுடன் ஒரு பாதுகாப்பான "கம்ஃபர்ட் ஜோனில்" சிக்கிக்கொண்டுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
வெறும் 9 எம்பி இடங்கள் அல்லது 18 எம்எல்ஏ இடங்களை பெறுவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளதால், காங்கிரஸ் தனது சொந்த வாக்கு வங்கியை தொடர்ந்து இழந்து வருவதாக எச்சரித்துள்ளனர்.
திமுக அரசின் குறைகளுக்கு முட்டு கொடுப்பதன் மூலம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அடிப்படை கொள்கைகளும் வாக்கு நிலவரமும் சிதைந்து வருவதாக விமர்சனம் செய்யப்படுகிறது.
காங்கிரஸ் தனித்து வளர்ந்து மீண்டும் இந்தியாவை ஆள வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வை இருந்தால், திமுக கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்பதே பலரது வாதம். விஜய் விரிக்கப்போகும் அரசியல் வலையில் காங்கிரஸ் விழுமா அல்லது திமுகவிடமே தஞ்சமடையுமா என்பது 2026 தேர்தலின் திருப்புமுனையாக அமையும்.
Edited by Siva