கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெபா மார்டின் என்பவர் கடந்த வாரம் தனது வீட்டில் கொள்ளை போனதாகப் புகார் அளித்திருந்தார். இது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியபோது, ஒரு திடுக்கிடும் உண்மை வெளிவந்தது.
பிடிபட்ட திருடன் மிகவும் நூதனமான முறையில், வீட்டின் பூட்டை உடைக்காமலேயே உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடிப்பதில் கில்லாடி என்பது தெரியவந்தது.
பிடிபட்ட நபர் பகல் நேரங்களில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இதன் மூலம் எந்த வீடுகளில் ஆட்கள் இல்லை, எங்குப் பாதுகாப்பு குறைவாக இருக்கிறது என்பதை நோட்டமிட்டுள்ளார்
கதவு பூட்டப்பட்டிருந்தாலும், ஜன்னல் வழியாகவோ அல்லது பூட்டை லாவகமாகத் திறந்தோ உள்ளே புகுந்து, சத்தமே இல்லாமல் திருடுவதை இவர் வழக்கமாக வைத்துள்ளார்.
தொடர் விசாரணையில், இவர் கோவையின் பல பகுதிகளில் இதுபோலத் திருட்டில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. அவரிடமிருந்து திருடப்பட்ட சொத்துக்களைப் போலீஸார் மீட்டு வருகின்றனர்.