Breaking: தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்து மீண்டும் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது…!!!
SeithiSolai Tamil January 03, 2026 06:48 AM

சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தில் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1120 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,00,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை அதிகரித்து ஒரு கிராம் 13,724 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,09,792 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் என்று கிராமுக்கு 4 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 260 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெளி 2,60,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.