சமூக வலைதளமான எக்ஸ் (X)-ல், மேடையில் நடனமாடிய ஒரு சிறுமி கூட்டத்திலிருந்த வாலிபர்களால் கீழே இழுக்கப்பட்டு தாக்கப்படும் அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் இந்தியாவில் நடந்ததாகக் குறிப்பிட்டுப் பகிரப்பட்டு வரும் நிலையில், இது ஒரு தவறானத் தகவல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உண்மையில், இந்தத் துயரமானச் சம்பவம் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஒரு கலை நிகழ்ச்சியின் போது நிகழ்ந்ததாகும்.
இந்தத் தவறானப் பதிவின் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் நெட்டிசன்களின் ‘குரோக்’ (Grok) தேடல் உதவியுடன், இது இந்தியாவில் நடக்கவில்லை என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டில் நடந்த விரும்பத்தகாதச் சம்பவத்தை, மற்றொரு நாட்டில் நடந்தது போலச் சித்தரிப்பது சமூகத்தில் தேவையற்றப் பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், இத்தகைய காணொளிகளைப் பகிரும் முன் அதன் உண்மைத்தன்மையை ஆராய்வது அவசியமாகும்.