இன்று தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த சிறப்பு முகாம்... மிஸ் பண்ணாதீங்க!
Dinamaalai January 03, 2026 10:48 AM

இன்றும், நாளையும் தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கோங்க. எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப் பிறகு தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 97 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்கள் மீண்டும் வாக்காளராக சேர ஒரு மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கடைசி நாள் ஜனவரி 18 ஆகும்.

இதற்கிடையே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்தார். அதன்படி முதல் கட்டமாக கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்கள் முகாம் நடைபெற்றது. பலரும் இதில் பங்கேற்று விண்ணப்பங்கள் அளித்தனர்.

இந்நிலையில் இன்றும், நாளையும் 2ம் கட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முகாம் நடத்தப்படும். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தவறுகள் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.