IND vs NZ 1st ODI: ரோஹித், கோலியை காண ஆவல்! 8 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்..!
TV9 Tamil News January 03, 2026 04:48 AM

இந்தியா மற்றும் நியூசிலாந்து (IND vs NZ) அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வருகின்ற 2026ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பரோடாவில் நடைபெறும் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் வெறும் 8 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டன. இதன்மூலம், இந்திய ஜெர்சியில் விராட் கோலி (Virat Kohli) மற்றும் ரோஹித் சர்மாவை மைதானத்தில் காணும் வெறி இன்னும் நீடிக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறது.

 8 நிமிடங்களில் விற்று தீர்ந்த ஆன்லைன் டிக்கெட்கள்:

🚨 𝐁𝐫𝐞𝐚𝐤𝐢𝐧𝐠 𝐍𝐞𝐰𝐬 🚨

The craze for Virat Kohli & Rohit Sharma’s return is absolutely unreal 🔥👑

Tickets for the 1st ODI | India 🆚 New Zealand | Baroda were SOLD OUT in just 8 minutes ⏱️😮
Around 40,000 tickets went on sale — and every single one disappeared in no… pic.twitter.com/WehoDZfpTB

— Telly Khazana (@tellykhazana)


இந்தியா vs நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை 2026 ஜனவரி 1ம் தேதி BookMyShow வலைத்தளம் மற்றும் செயலியில் தொடங்கியது. அறிக்கைகளின்படி, ரசிகர்கள் டிக்கெட்டுகள் திறந்தவுடன் வாங்க விரைந்தது மட்டுமின்றி, அனைத்து ஆன்லைன் டிக்கெட்டுகளும் 8 நிமிடங்களுக்குள் விற்றுத் தீர்ந்துவிட்டன. இருப்பினும், இதுவரை ஆன்லைன் டிக்கெட்டுகள் மட்டுமே விற்றுத் தீர்ந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஆஃப்லைன் டிக்கெட் விற்பனைக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

2026ல் ரோஹித்-விராட் ஜோடியின் முதல் சர்வதேச போட்டி:

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியானது 2026 ஆம் ஆண்டில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் முதல் சர்வதேச போட்டியாகும். இரு ஜாம்பவான்களும் கடைசியாக டிசம்பர் 2025ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினர். 2024ம் ஆண்டு டி20 சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் 2025ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற பிறகு, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றன. எனவே, இவர்கள் இருவரின் விளையாட்டை காண ரசிகர்கள் போட்டா போட்டியில் டிக்கெட்டுகளை வாங்குகின்றனர்.

ரோஹித்-கோலி சிறந்த ஃபார்ம்:

சமீப காலங்களில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ரோஹித் மற்றும் விராட் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ஒரே வடிவத்தில் விளையாடுவது அவர்களின் ஃபார்மையும் உடற்தகுதியையும் பாதிக்கவில்லை என்பதை இருவரும் நிரூபித்துள்ளனர். 2027 உலகக் கோப்பை குறித்து தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கரின் கருத்துக்கள் இருந்தபோதிலும், இருவரும் களத்தில் தங்களது பேட்டிங் மூலம் பதிலளித்துள்ளனர்.

இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும்?

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி 2026 ஜனவரி 3 =ம் தேதி அறிவிக்கப்படலாம். ஆஸ்திரேலியாவிடம் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்து, தென்னாப்பிரிக்காவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்திய பிறகு, முந்தைய ஒருநாள் தொடரில் இந்தியா வலுவான வெற்றியை பெற முயற்சிக்கும்.

இந்தியா vs நியூசிலாந்து 2026 முழு அட்டவணை:
  • 1வது ஒருநாள் போட்டி: 2026 ஜனவரி 11 – பரோடா (பிற்பகல் 1:30 IST)
  • 2வது ஒருநாள் போட்டி: 2026 ஜனவரி 14 – ராஜ்கோட்
  • மூன்றாவது ஒருநாள் போட்டி: 2026 ஜனவரி 18 – இந்தூர்

இதன் பின்னர், ஜனவரி 21 முதல் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.