வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? இன்று மற்றும் நாளை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 2-ம் கட்ட சிறப்பு முகாம்..!
Top Tamil News January 03, 2026 11:48 AM

எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பிறகு தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு உள்ளனர். அவர்கள் வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 18-ந்தேதி கடைசி நாள்.

இதனிடையே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்து இருந்தார். அதன்படி, இந்த சிறப்பு முகாம் முதற்கட்டமாக கடந்த சனி, மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.

இந்த நிலையில் 2-ம் கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள இன்றும், நாளையும் ஆகிய இரு தினங்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.