புண்ணியம் தேடிப் போய் பாவத்தில் முடிந்த செயல்.. நர்மதா நதிக்கரையில் 200 கிளிகள் திடீர் மரணம்.. பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை..!!
SeithiSolai Tamil January 03, 2026 02:48 PM

மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில், நர்மதா நதிக்கரையில் உள்ள நீர்வழிப் பாலம் அருகே சுமார் 200 கிளிகள் உணவு நச்சுத்தன்மையால் உயிரிழந்துள்ளன.

இறந்த பறவைகளின் வயிற்றில் அரிசி மற்றும் சிறிய கூழாங்கற்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவற்றுக்கு வழங்கப்பட்ட முறையற்ற உணவு அல்லது பூச்சிக்கொல்லி கலந்த தானியங்களே இந்த மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மீட்கப்பட்ட சில கிளிகள் உயிருடன் இருந்தபோதிலும், விஷத்தின் வீரியம் அதிகமாக இருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன.

இந்தச் சம்பவம் குறித்து ஆய்வு செய்த கால்நடை மருத்துவர்கள், இது பறவைக் காய்ச்சல் அல்ல என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். மக்கள் பெரும்பாலும் அறியாமையால் சமைத்த உணவுகளையும், மீதமுள்ள உணவுகளையும் பறவைகளுக்கு வழங்குவது அவற்றின் செரிமான மண்டலத்தைப் பாதிப்பதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போது பறவைகளின் மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக ஜபல்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்தப் பகுதியில் பறவைகளுக்கு உணவளிக்க வனத்துறை தடை விதித்துள்ளதுடன், கண்காணிப்புப் பணிகளுக்காக ஊழியர்களையும் நியமித்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.