எக்ஸ் (X) தளத்தில் வெளியாகியுள்ள ஒரு காணொளி பார்ப்பவர்களைப் பதறவைக்கும் வகையில் உள்ளது. அந்த வீடியோவில், இரண்டு குழந்தைகளும் இரண்டு பெரியவர்களும் சேர்ந்து ஒரு நீரோடையில் உள்ள பாறை மீது நின்றபடி புகைப்படம் எடுக்க முயற்சிக்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு சிறுமி பாறையிலிருந்து வழுக்கித் தண்ணீரில் விழுந்துவிடுகிறாள்.
சிறுமி விழுந்த அடுத்த கணமே, தாய் சிறிதும் யோசிக்காமல் நீர் ஓடும் திசையை நோக்கிச் சென்று, அங்கிருந்தவர்களின் உதவியுடன் குழந்தையைப் பத்திரமாக மீட்கிறார். தற்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருவதோடு, நீர்நிலைகளில் புகைப்படம் எடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.