சென்னையில் 'பாரத் 2026' தமிழ் காலண்டர் வெளியீடு: தமிழ் பதிப்பு காலாண்டரை வெளியிட்ட இணை மந்திரி எல்.முருகன்..!
Top Tamil News January 03, 2026 11:48 AM

 'பாரத் 2026' என்ற பெயரில் மத்திய அரசு சார்பில் காலாண்டர் தயாரித்து வெளியிடப்பட்டது. இந்த காலாண்டரின் தமிழ் பதிப்பு வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில், மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டு ' பாரத் 2026' தமிழ் பதிப்பு காலாண்டரை வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்த காலாண்டர் 'இந்தியா 2047' ஐ நோக்கிய ஒரு செயல்திட்ட வழிகாட்டி ஆகும். இது நாட்டின் முன்னேற்றம், எதிர்கால வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. மத்திய அரசின் காலண்டர் தமிழ் பதிப்பு தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவது இதுதான் முதல் முறை ஆகும். இந்த காலாண்டர் இந்தி, ஆங்கிலம் மற்றும் 13 மொழிகளில் வெளியிடப்பட்டு பரந்த அளவில் மக்களை சென்றடைந்துள்ளது.' என்றார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் வி. பழனிசாமி, அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் கூடுதல் தலைமை இயக்குனர் எம்.வாசுகி, மத்திய மக்கள் தொடர்பக இயக்குனர் ஜெ.காமராஜ், சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இயக்குனர் பி.அருண்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.