தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகை தொடர்பான அறிவிப்பை ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்டவைகள் வழங்கப்படும் என்றும் இதற்கான டோக்கன்களை வீடு வீடாக சென்று விநியோகிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த டோக்கனில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்படும் தேதி மற்றும் நேரம் போன்றவைகள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்த நிலையில் தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்த்த ரொக்க பணம் குறித்த அறிவிப்பை தற்போது முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 3000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அவரது அறிவிப்பு தற்போது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.