15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
Dinamaalai January 05, 2026 05:48 PM

நெல்லை மாவட்டத்தில் 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வள்ளியூரில் கடந்த 2024ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் தீர்ப்பு இன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரிய வந்ததை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிறந்த குழந்தைக்கு நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில், குற்றவாளி சிறுமியின் தந்தையே என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடிப்படையாக கொண்டு வழக்கு விசாரணை நடைபெற்றது.

அனைத்து ஆதாரங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம், குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பு சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.