கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் சாலையோரம் கிடந்த மர்ம பொருள் வெடித்ததில் 11 வயது சிறுவன் படுகாயமடைந்தான். வீட்டம்பாராவைச் சேர்ந்த ஸ்ரீஹர்ஷன் என்ற சிறுவன், தனது தாயுடன் கிராமப்பகுதியில் நடந்து சென்றபோது இந்த சம்பவம் நடந்தது. சிறுவனின் கால் அந்த பொருளில் பட்டதும் திடீரென வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியது.
வெடிவிபத்தில் சிறுவனின் கணுக்காலில் சதை கிழிந்து பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவனை பெரிந்தல்மன்னாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது கூட்டுறவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பகுதி காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி நடமாடும் இடம் என்பதால், அவற்றை விரட்ட சிலர் வெடிபொருட்களை வைத்திருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அறிவியல் பரிசோதனையுடன் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!